நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ராமதேவன்பட்டியில் உள்ள முன்னாள் சபாநாயகர் காளிமுத்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றியுள்ளார்.
அவர் அவர், ” நாம் தமிழர் கட்சி சார்பில், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளரே மீண்டும் போட்டியிடுவார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்தியில் ஆளும் பா.ஜ.கவிற்கு மேஸ்திரி போல செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் கூட தேசிய மொழிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே இறந்துப் போன சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பதற்கு தான் விரும்புகின்றனர். ஆனால், அழிந்து வரும் தமிழ் மொழியை வளர்க்க நாங்கள் இங்கே போராடுவதாய் இருக்கின்றது.
திமுகவில் வாரிசு அரசியலை பார்த்து ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அவ்வாறு நடக்கவில்லை என்றால் தான் வியப்பு. திமுகவில் கேள்வி எழுப்ப கூடாது என்பதற்காக தான் இவ்வாறு வாரிசுகளுக்கு பதவி கொடுக்கின்றனர். ” என தெரிவித்துள்ளார்.