இதுவரை ஐபில் தொடரில் 8 அணிகள் விளையாடி வந்தன அதில் தற்போது சில மாற்றங்களை கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை தொடர்ந்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கடந்த வாரம் லண்டனில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட அதானி குழுமம் மற்றும் டாடா குழுமம், ஆர்.பி.ஜி நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு அணி வேண்டும் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் வரும் ஐபில் போட்டியில் மேலும் சில அணிகள் ஐபிஎல் தொடரில் இணைக்கப்படலாம் என்றும் அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் தமிழகத்திற்கு இரண்டு அணிகளாக பிரிப்பார்களா பொறுத்து இருந்து பார்க்கலாம்.