மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இன்று சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனின் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிச்சயதார்த்தம் ஆகஸ்டு 7ஆம் தேதி பின்னர் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஆடி மாதம் என்பதால் தற்போது முகூர்த்த நாளில் ஜோதிடர் குறிப்பிட்டபடி நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
திமுகவினரும் அதிமுகவினரும் நட்பு பாராட்டாமல் இருந்து வந்தனர். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த நிலைமை மாறியது. திமுக, அதிமுக உயர்மட்ட தலைவர்கள் குடும்பங்களோடு திருமண உறவு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகள் இடையே மறைமுக கூட்டணி உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.