இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெரும்பாலும் பெண்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள் பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகேயுள்ள பட்டாம்பி திருத்தலா பகுதியை சார்ந்தவன் கிருஷ்ணன் (வயது 57). இவன் அங்குள்ள பகுதியில் இருக்கும் அரசு பள்ளிக்கு அருகே பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளான்.
இந்த நிலையில்., இவனது கடைக்கு வரும் மாணவ – மாணவிகளுக்கு மிட்டாய் அதிகளவு வழங்கி., சிறுமிகளை தனது கடைக்குள் புத்திசாலித்தனமாக அழைத்து சென்று சீரழித்து வந்துள்ளான். மேலும்., இவன் ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளை சீரழித்து வந்துள்ளான்.
இந்த நிலையில்., இது குறித்து சிறுமி ஆசிரியரிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., பெட்டிக்கடை என்ற பெயரில் சிறுமிகளை சீரழித்தது தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையை அடுத்து கடந்த இரண்டு வருடத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் அத்துமீறியது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.