கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே மோதல்..

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று உலக கோப்பையை முதல் முறையாக வென்றது.

இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணி எடுத்த சில முடிவுகளை பல முன்னணி வீரர்கள் விமர்சித்தனர்.

இதனால் விராட் கோலி கேப்டன்சி கேள்விக்குறியாகியுள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு பிடித்தமான வீரர்களை இந்திய அணியில் விளையாடுகிறார்கள் என்றும் திறமை வாய்ந்த வீரர்கள் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் கேப்டன் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் வீரர்களின் அறையில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தற்போதிலிருந்தே இந்திய அணியை தயாராகும் பொருட்டு ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கிடையே ஏற்பட்ட சலசலப்பு இந்திய அணியில் விரிசலை ஏற்பட்டு அணி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக ரோகித் ஷர்மாவிடம் கேப்டன் பதவியை கொடுத்து 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தலைசிறந்த அணியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.