உலக கோப்பை பிறகு இந்திய அணியின் ரசிகர்களால் பேசப்பட்டு வரும் ஒரு செய்தி தோனி எப்போது ஓய்வு பெறுவார் அல்லது இந்திய அணியில் தொடர்வாரா? என்ற கேள்வி தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
தோனி குறித்து பல முன்னணி வீரர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணிக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்திய அணியின் தன்னம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின், சேவாக், கம்பீர் என அடுத்தடுத்து அணியில் இருந்து விலகினார்கள்.
அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய மூவரும் இந்திய அணியில் இருந்து செல்வதற்கு தோனி தான் காரணம் என பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. தற்போது அவர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் தோனிக்கும் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சேவாக் தோனி குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியவை, நான் அணியில் இருந்து கொஞ்ச காலம் விளக்கப்பட்டேன். ஆனால் அதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கும் போது என்னிடம் எதுவுமே சொல்லவில்லை.
அதற்கு முன்பே வீரர்களை நீக்கினால் அவர்களிடம் தெரிவிக்கப்படும். ஆனால் 2007ஆம் ஆண்டுக்கு பின்பு அப்படி நடக்கவில்லை. வீரர்களை நீக்கும் போது அவர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது மட்டும் மூத்த வீரர்கள் நீக்க அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசிக்கிறது.
சில வீரர்களை நிக்க அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இந்திய அணி எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்றால் நாம் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தோனியை நீக்க வலியுறுத்தி பேசியுள்ளார்.