ரோஜாவுக்கு அதிரடியாக புதிய பதவியை வழங்கிய ஜெகன்மோகன்!!

ஆந்திர மாநிலத்தில் கடந்த முறை ஆட்சிலிருந்த சாதிரபாபு நாய்டுவை வீழ்த்தி சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் முதல்வரானார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்றதற்கு ரோஜாவின் பிரச்சாரமும் முக்கிய காரணம் என கூறப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு எந்தவிதமான அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை.

ரோஜா அமைச்சர் பதவி வழங்கப்படாததால் இதனால் அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைவரான ஜெகன் மோகன் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் ரோஜா தான் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு ஆந்திர மாநில தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக ரோஜாவை முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதைத்தொடர்ந்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜா தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியை நேற்று ஏற்றுக்கொண்டுடார்.