சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை சட்டத்திற்கு முரணான ரீதியில் திருமணம் முடித்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.

தங்க நகர்,கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

சந்தேக நபர் பதினைந்து வயதுடைய சிறுமியை மூன்று வருட காலமாக காதலித்து திருமணம் முடித்துள்ளதாகவும் இவைதொடர்பாக அப்பகுதி கிராம அதிகாரி மற்றும் பொது மக்களும் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் (வாசஸ்தலத்தில்)ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பதினைந்து வயதுடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.