எதிர்பாராத நேரத்தில், அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழகத்தை பொறுத்தவரை, பிற மாநிலங்களில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த பலரும், பிரபலமான பின் தனது ரசிகர்களை கொண்டு அரசியல் கட்சிகளை துவங்குவது வழக்கம். அவ்வாறு கட்சி துவங்கி அதில் வெற்றியும் கண்டவர்கள் பலர். தற்பொழுது ‘மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியினை துவங்கி, முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலிலும் பங்கு பெற்று குறிப்பிட்ட வாக்குகளை பெற்று இருப்பவர்தான் நடிகர் கமலஹாசன்

அவர் அரசியலில் ஈடுபட்ட பொழுதும், நடிப்பை முழுமையாக விட வில்லை என்றே கூறவேண்டும். விஜய் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் தொகுப்பாளராக தோன்றுபவர் நடிகர் கமலஹாசன். இதில் பிக்பாஸ் ஒன்றில் ஆரம்பித்து இரண்டு மற்றும் தற்போது நடைபெற்று வரும் 3 ஆகிய நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கமலஹாசன் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இதன் பின்னர், பிக் பாஸ் 2 இருக்கும் மூன்றுக்குமான இடைவெளியில் கமலஹாசன் அரசியல் கட்சியை துவங்கியதால், பிக்பாஸ் மூன்றில் விஜய் டிவி தொகுப்பாளராக வரப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இருப்பினும் மீண்டும் கமல்ஹாசனே தொகுப்பாளராக வந்தது, பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில், ஏ ஆர் ரகுமான் தளபதி விஜயின் திகில் படத்திற்கு, தற்போது இசையமைத்து வருகின்றார். இதனை தொடர்ந்து அவர் விக்ரமின் அடுத்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான் ஒரு புதிய ப்ராஜக்டில் இணையப் போவதாக கமல் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், லைக்கா நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது எனவும் ஆர் ரகுமான் குறிப்பிட்டுள்ளார், இந்த கூட்டணியானது’தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்திற்காக என கமல் தெரிவித்துள்ளார்.