இறந்த கணவனின் உடலை வாங்க போர்க்களமாக மாறிய மருத்துவமனை..!!

தருமபுரி மாவட்டத்தை சார்ந்தவனின் பெயர் ராஜா (வயது 30). இவன் அழகு கலைநிபுணராக பணியாற்றி வருகிறான். இந்த நிலையில்., இவனது மாமன் மகளான சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டான். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., பணியிடம் காரணமாக தேனிக்கு இடம் மாற்றம் பெற்று குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில்., அதே பகுதியில் வசித்து வந்த பெண்ணான தனலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே., அவரையும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளான். இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்திய குடும்பத்தின் விளைவாக இரண்டு குழந்தைகள் மீண்டும் பிறந்துள்ளார். இந்த நிலையில்., மதுரைக்கு பணி மாற்றம் கிடைத்துள்ளது.

மதுரைக்கு சென்ற இவருக்கும்., தாய் மற்றும் தந்தையை இழந்து வாடி வந்த 19 வயது பெண்ணுடன் ராதிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரை காதலித்து மூன்றாவதாக திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில்., இவனது மன்மத லீலைகள் பிற இரண்டு மனைவிக்கும் தெரியவந்துள்ளது. முதல் இரண்டு திருமணத்தை மறைத்த நிலையில்., ராஜாவிடம் இரண்டு மனைவிகளும் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்த நேரத்தில்., புதுச்சேரியில் உள்ள அழகு நிலையத்திற்கு பணி மாற்றம் கிடைத்ததை அடுத்து., புதுச்சேரிக்கு சென்று அறையெடுத்து தங்கி., பின்னர் மூன்றாவது காதலித்த பெண்ணை சேர்ந்து வாழ அழைத்துள்ளான். திருமணம் செய்த பின்னர் தான் நான் வருவேன் என்று மூன்றாவதாக அமையவிருந்த காதலி கூறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜா மன உளைச்சலில் தற்கொலை முடிவு செய்துள்ளான்.

இவன் தற்கொலை செய்த பின்னர் இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி அவனது அலைபேசியில் உள்ள எண்களை பார்த்துள்ளனர். அந்த சமயத்தில்., மூன்று மனைவியின் எண்கள் மனைவி 1., மனைவி 2., மனைவி 3 என்று பதிவு செய்யப்பட்டு இருந்துள்ளது.

இதனை கண்ட காவல் துறையினர் மூன்று எண்கள் என்று எண்ணி மூன்று அலைபேசிக்கும் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மூவரும் தங்களின் குழந்தைகளை அழைத்து கொண்டு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு விரையவே., காவல் துறையினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். பின்னர் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., மன்மத லீலைகள் வெளிவந்துள்ளது.

பின்னர் மூவரும் தனித்தனியே சடலத்தை எங்களுடன் தான் கொண்டு செல்வோம் என்று போராட்டத்தில் குதித்தனர். மூன்றாவதாக வந்த பெண்ணின் வயது 19 என்ற காரணத்தால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்த காவல் துறையினர்., சட்டதிட்டங்கள் படி முதல் மானைவியுடன் சடலத்தை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.