இரு முக்கிய தளபதிகளை இழக்க போகும் தினகரன்!!

வேலூர் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் ரத்தான போது வேட்பாளர்களாக இருந்த தி.மு.க. கதிர் ஆனந்த, அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகமும், நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமியும் இப்போது மீண்டும் களம் காண்கிறார்கள். சைலண்ட் மோடில் இருக்கும் அ.ம.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என அறிவித்தது.

கடந்த முறை வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டபோது அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட பாண்டுரங்கன், தினகரனை நம்பி ஏராளமாக செலவு செய்து செய்ததாகவும் இப்போது பணம் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார். அதேபோல் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்றத் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர்களும் கடனாளிகளாகிவிட்டனர். இங்கிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் வரிசையில் சிவசங்கரன் அ.தி.மு.க.விலும்,, முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் தி.மு.க.விலும் சென்று சேர்ந்து விட்டனர்.

மக்களவை தேர்தல் தோல்வியில் இருந்து தினகரன் இன்னும் எழுந்து வரவில்லையாம். அதோட தனது தொடர் சங்கடங்களுக்கு, இப்ப இருக்கும் அடையாறு வீட்டின் வாஸ்து கோளாறுதான் காரணம் என அவர் நினைக்கிறாராம். அதனால் கொஞ்சநாள் புதுவை சென்று தங்கலாம் என முடிவு எடுத்துள்ளாராம். இந்த நிலையில் அ.ம.மு.கவில் இருக்கும் திருச்சி மனோகரன் அ.தி.மு.க. பக்கமும், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தி.மு.க. பக்கமும் செல்ல போகிறதாக வந்த தகவலால், தினகரன் மேலும் நொந்து போயிட்டாராம்.

இந்த நிலையில், நேற்று தருமபுரி உள்ள பாப்பிரெட்டிபட்டியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அதில் அமமுக போட்டியிடாது என தெரிவித்துள்ளார்.