இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., ஜிதேந்திர ராய்க்கு அதே பகுதியை சார்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நட்பு ரீதியாக தொடர்ந்து வந்த நிலையில்., இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இவர்களின் கள்ளக்காதலை வளர்க்க அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., கள்ளகாதலியின் மீது இருந்த மோகத்தால் அவருடனே சேர்ந்து வாழ முடிவு செய்தார்.
இவர்களின் வாழ்க்கைக்கு பணம் தேவை என்பதை உணர்ந்த கள்ளக்காதல் ஜோடி., மனைவியின் காவல் அதிகாரி உடையை எடுத்து கள்ளகாதலியிடம் கொடுத்து., போலியான அடையாள அட்டையை தயார் செய்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்த தகவலானது காவல் அதிகாரிகளுக்கு தெரியவரவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடிகளை அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., காவல் ஆய்வாளரின் கணவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்., சம்பவ இடத்திற்கு அதிர்ச்சியுடன் வந்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சியாக இந்த தகவல் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடிகளை சிறையில் அடைத்தனர்.