உலகக்கோப்பையில் நாங்கதான் கிங்! ஆணித்தரமாக பதிவு செய்த சச்சின்!

நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு ஐசிசி முதல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என அனைவரும் தங்களுடைய கனவு அணியினை வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சாதனையாளருமான சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கனவு அணியினை வெளியிட்டுள்ளார்.

ஆல் டைம் கனவு அணி வெளியிடும் வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் பெரும்பாலும் இந்தியர்களில் பெயருக்கு என்றும் கிரிக்கெட் புத்தகத்திலிருந்து நீக்க முடியாத சச்சினையும், அதற்கடுத்தபடியாக இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் கபில்தேவ் ஆல்ரவுண்டர் வரிசையிலும் இணைப்பார்கள். மறந்தும் சுழல் சாம்பியன் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் ஆட்டத்தினை ரசிக்க வைத்த ராகுல் டிராவிட் ஆகியோரை சேர்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் நாட்டு வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து இருப்பார்கள். ஆனால் இதில் இந்தியாவில் மட்டும் சற்று விதிவிலக்காக மற்ற நாட்டிலும் சிறப்பாக விளையாடியவர்களை அணியில் சேர்த்து வைத்து இருப்பார்கள். ஆனால் இதில் சச்சின் இந்த முறை முரண் பட்டுள்ளார். இந்த உலகக் கோப்பையில் மிடில் ஆர்டர், சுழற்பந்துவீச்சு தவிர்த்து இந்திய அணியானது மிகச் சிறப்பாகவே செயல்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். விமர்சனம் செய்யும் அளவிற்கு ஒன்றும் மோசமாகவும் ஆடிவிடவில்லை. ஆனாலும் அனைவரும் வெளியிட்ட அணிகளில் இந்திய சார்பில் அதிகபட்சம் இரண்டு வீரர்கள் மட்டுமே இடம்பெறுமாறு தேர்வு செய்தார்கள்.

ஆனால் எங்கள் நாட்டு வீரர்கள் ஒன்றும் அவ்வளவு மோசமாக ஆடி விடவில்லை என்பதை, இந்த உலகிற்கு உணர்த்தும் விதமாக தன்னுடைய அணியில் 5 இந்திய வீரர்களை சச்சின் டெண்டுல்கர் சேர்த்துள்ளார். அவருடைய தேர்வில் தொடரின் அதிகபட்ச ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, அதே போல மிகச் சிறப்பாக பந்துவீசி முதல் ஐந்து இடங்களில் வந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஆல்-ரவுண்டராக அசத்திய பாண்டியா, கேப்டனாகவும் மூன்றாவது இடத்தில் இறங்கி 400 ரன்களுக்கு மேல் அடித்த விராட்கோலி இடம்பெற்றதெல்லாம் ஆச்சரியம் இல்லை. இரண்டே இரண்டு போட்டிகளில் விளையாடிய ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றது தான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அவர் இரண்டு போட்டிகளில் விளையாடினாலும், இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியது உடன் மற்ற ஆட்டங்களில் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கியவர் மிக சிறப்பான பீல்டிங் செய்ததுடன், இந்த தொடரில் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்தவர்களில் அவரே முதலிடத்தில் இருந்தார் என்பதையும் இங்கே கவனிக்க வைக்கிறது. இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை என்ற சோகத்துடன் இருந்தாலும், மற்றவர்கள் கொடுக்காத முக்கியத்துவத்தை, இந்திய அணி அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்பது போல, இந்திய அணி வீரர்களுக்கு சச்சின் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் இந்திய அணிக்கு நிச்சயமாக நம்பிக்கை அளிக்கும்.

சச்சின் அணி : ரோஹித் சர்மா, ஜன்னி பைரஸ்டோவ் (wk), காணே வில்லியம்சன் (c), விராட் கோஹ்லி, சாகிப் அல் ஹசன், ஹர்டிக் பாண்டியா, பெண் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், ஜோபிரா ஆர்ச்சர், ஜஸ்பிரிட் பும்ரா.