ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகை சாய் பல்லவி. அவர் அதன் பிறகு தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சில படங்களில் இருப்பது போல அங்கங்கே சில காட்சிகள், ரெண்டு டூயட் பாடல் என ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாமல் வரும் வாய்ப்புகளை அவர் நிராகரித்தும் வந்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள டியர் காம்ரேட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியைதான் அணுகினார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என கூறி சாய் பல்லவி அதை நிராகரித்துவிட்டாராம்.
அதன் பின்னர் தான் ரஷ்மிகா ஹீரோயினாக தேர்வாகியுள்ளார்.