ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பெலேத ரஜமகா விகாரையில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர்,
“21/4 குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் இருப்பதால், அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.