தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை சிங்கள பௌத்த மக்கள் கையிலெடுக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினா் அத்துரலிய ரத்தின தேரா் தெரிவித்துள்ளார்.
கன்னியாவில் இடம்பெற்ற தமிழ்- சிங்கள மக்களுக்கிடையிலான முறுகல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியா விவகாரத்தில் ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம் என்றும், நீதியின் அடிப்படையிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும், எனவே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள– பௌத்த மக்கள் வன்முறையை பிரயோகிக்கக்கூடாது என அத்துரலிய ரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்.