வருகிற 30-ஆம் தேதி கடைசி தேதியாக குறிப்பிட்டுள்ளது. இதில் மீண்டும் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுவரை சச்சின் மற்றும் கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கொண்ட கமிட்டிதான் பயிற்சியாளரை தேர்ந்தெடுத்து கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்து வந்தனர்.
ஆனால் சச்சின், லட்சுமணன் மற்றும் கங்குலி உள்ளிட்டோர் மீது இரட்டை ஆதாய பிரச்சினை இருப்பதால் இந்த முறை அவர்கள் பயிற்சியாளர் தேர்வு பணியை செய்ய மாட்டார்கள் என்பது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி ஆண்கள் அணிக்காக பயிற்சியாளரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த கமிட்டியில் அன்ஷுமன், கெய்ட்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இருந்தாலும் இந்த பணியை அதிகாரபூர்வமாக எந்த கமிட்டி மேற்கொள்ளும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகே தெரிய வேண்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.