இந்திய அணியின் முன்னாள் வீரர் பேட்டிங் ஆலோசகராக நியமனம்.!

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி லீக் சுற்றுகளோடு வெளியேறியது அந்த அணியின் கிரிக்கெட் வாரியம் பல அதிரடி முடிவுகளை எடுத்துளள்ளது. இந்த தொடரில் வங்கசேத அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தைப் பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததால் அந்த அணி மீது பல விமர்சனம் எழுந்தது.

அதனை தொடர்ந்து வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சம்பகா ரமனாயகே நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாசிம் ஜாபர் அவர்கள் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 41 வயதான வாசிம் ஜாபர் ரஞ்சி கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் இவரே முதலிடத்தில் இதுவரை இருக்கிறார்.