இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வென்று முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுள்ளது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்தது 242 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இத்னால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15 ரன்கள் மட்டும் எடுத்தது.
இதிலும் சமநிலையில் முடிந்தது.இதையடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது.
இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியவை, எனக்கு ஓவர் த்ரோ பற்றி எதுவும் தெரியாது. அதேசமயம் நடுவரின் செயல்களை நாம் நிச்சயம் நம்பித்தான் ஆகவேண்டும் அவர்கள் அந்த இடத்தில் விதிகளை பின்பற்றி தான் இருக்கிறார்கள்.
அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே, சில சமயங்களில் தவறாகிவிடுகிறது. மேலும் அந்த விதி விளையாட்டில் உள்ள ஒரு இயல்பான விதி. இதில் கவனம் கொள்வது தேவையில்லாதது என கூறினார்.