திருத்துறைப்பூண்டி, தேத்தகுடி ஊரை சேர்ந்த ஜீவஜோதி என்பவர், தனது தாய் மற்றும் கணவருடன் சென்னையில் தங்கி, சரவணபவன் ஹோட்டலில் பனி செய்து வந்தார். ஜீவஜோதி மீது சரவணா பவன் ஹோட்டலின் ஓனர் ராஜகோபாலுக்கு ஆசை ஏற்பட்டு உள்ளது, அவரின் ஆசைக்கு இணங்க ஜீவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜீவஜோதி வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமாரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இருப்பினும் ஜீவஜோதியை விடாத ராஜகோபால், அவரை 3வது திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி, இரண்டாவது கணவரை (பிரின்ஸ்) மிரட்டிய நிலையில், கடந்த 2001 ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டார்.
அடுத்த ஐந்தாவது நாள் (31ம் தேதி) கொடைக்கானலில் மலை பள்ளத்தாக்கில் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் பிணமாக கிடந்தது. பிரதே பரிசோதனையில் அவர் கொலை செய்து மலையில் இருந்து வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், சரவண பவன் அதிபர் ராஜகோபால், மேனேஜர் டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், தமிழ்செல்வன், காசிவிசுவநாதன், பட்டுராஜன், சேது, முருகானந்தம் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியும், கொலைக்கு உடந்தையாக இருந்த 8 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டையும், 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும் அவரது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதிலிருந்து விலக்கக் கோரி ராஜகோபால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனனை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவர்கள் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு சுவாசக் கோளாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு எட்டு நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜகோபால் காலமானார்.