ஈழத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய செய்தி…. !! நல்லூரானுக்கே இந்தக் கதியா…?

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வெளிவீதியில் தேர் உலா வராத போதிலும், ஆலயத்தில் உள்வீதியில் சிறிய தேர் உலா வரும் என கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நல்லூர் ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்இ இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதேவேளை வருடாந்த உற்சவத்தின் போது ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு பக்தர்களையும் பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.கோயிலின் நான்கு வாசல்களிலும் வைத்து அடையாளட்டை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோயில் வளாகத்தில் வழமை போன்று வியாபார நிலையங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு அப்பால் அரைகிலோமீற்றர் தூரத்தில் வர்த்தக நிலையங்களை அமைக்க யாழ். மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை காண புலம்பெயர் நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தாயகம் வந்து கந்தனின் அருள் பெற்று செல்கின்றமை வழக்கம். இம்முறை கந்ததின் தேரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் அனைத்து தமிழ் மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.