தாயும் – மகளும் உள்ளாடையை மாற்றி உபயோகித்ததில் நேர்ந்த சோகம்.!

பொதுவாக ஒருவர் பயன்படுத்திய ஆடையை மற்றொருவர் பயன்படுத்தினால் சுகாதார ரீதியில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த விஷயத்தை சிலர் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆடைகளில் குறிப்பாக உள்ளாடைகளை மாற்றி கொள்வது மிகவும் அதிகளவு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி., தொடர்ந்து 15 நாட்களாக கடுமையான வாந்தி., காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார். இதனை கண்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருந்த தாயார்., மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., சிறுமியின் கருமுட்டை குழாய் நீரால் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது கருமுட்டை குழாயில் பெரியளவில் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நோய் கூபக அலர்ஜி என்றும்., இந்த நோய் ஏற்படுவதற்கு பாதுகாப்பற்ற தாம்பத்தியம் மற்றும் பலநபர்களுடன் தாம்பத்தியம் மேற்கொண்டால் வரும் என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும்., சிறுமிக்கு 16 வயதே ஆகும் சூழலில் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகமும் இருந்துள்ளது.

சிறுமியும் பருவமடைந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் என்று தாயார் தெரிவிக்கவே., இவர்களின் வாழ்க்கை சூழ்நிலையை மருத்துவர்கள் ஆராந்துள்ளனர். அந்த ஆராய்ச்சியில்., தாய் – மகள் இருவரும் தங்களின் உள்ளாடைகளை ஒருவருக்கொருவர் மாற்றி உபயோகம் செய்தது தெரியவந்தது. இந்த பிரச்சனையால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாயார் யோனி அழற்சியால் பாதிப்படைந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்., தாயாரின் உள்ளாடையை மாற்றி உபயோகம் செய்து வந்த மகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பை கண்டறிந்த மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை மேற்கொண்டு., வலது கருமுட்டை குழாய் மற்றும் வலது கருவகத்தை அகற்றினர். இந்த செய்தியை ஒரு பாடமாக எடுத்து கொண்டு சுகாதாரத்தை கையாள்வது., இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உதவும்.