உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ உள்ளதாக செய்தி வெளியாகி வருகின்றன. இந்த வகையில் ரோகித் சர்மா இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்றும் கோலி டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக மட்டும் இருப்பர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவை, அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை.
நிச்சயம் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த சில முன்னணி வீரர்கள் இந்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த மாதம் இதுவரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விண்ணப்பிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இவை 2009-ல் இருந்து சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
ஐசிசி அதிகாரிகளுடன் இவருக்கு இருக்கும் நெருக்கம் காரணமாக இவர் விண்ணப்பம் அளிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.