கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்குள் சரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு கிடப்பதாகவும், அவரை மீட்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை அடங்குகின்றன.
கினிகத்தேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இப்பிரதேசத்தில் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.
புதிய இணைப்பு
குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக சரிவில் சிக்குண்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கே.எம்.ஜமால்டீன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.