பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் பிரபலமாக ஓடுகிறது. தினமும் காதல் கிசுகிசு, சண்டை, போட்டி, பொறாமை என எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சி செல்கிறது.
இந்நிகழ்ச்சியில் இப்போது 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள், அடுத்து யார் என்று மக்கள் கொஞ்சம் கணித்து வைத்துள்ளார்கள். நிகழ்ச்சிக்குள் 17வது போட்டியாளராக யார் செல்ல இருக்கிறார் என பல வதந்திகள் உலா வருகிறது.
வீட்டிற்குள் இருக்கும் சாண்டி மனைவியின் தங்கை சிந்தியா அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆல்யா மானசாவின் புகைப்படத்தை போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளர் என பதிவு செய்துள்ளார்.
இதனால் ஆல்யா தான் 17வது போட்டியாளரா என ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.