பிரிட்டன் எண்ணை கப்பலை ஈரான் கைப்பற்றி இழுத்துச் சென்றது!

சமீபத்தில் ஈரான் நாட்டு எண்ணைக் கப்பலை, பிரித்தானிய கடல்படையினர் கைப்பற்றிய சம்பவம் யாவரும் அறிந்ததே. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறிவந்த நிலையில், சற்று முன்னர் ஈராணிய படையினர் பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணைக் கப்பல் ஒன்றை கைப்பற்றி இழுத்துச் சென்றுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது.

இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான முறுகல் நிலை மேலும் இறுக்கமடைந்துள்ளது. பிரித்தானிய கப்பல் படையினர் உடனடியாக மீட்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் என்றும். இது ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக , செய்திகள் தெரிவிக்கின்றன.