பிரித்தானியாவில் 7 மாத குழந்தையை தலையில் தாக்கி கொடூரமாக கொன்ற இந்திய வம்சாவளி தாயாருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எசெக்ஸ் பகுதியில் கணவருடன் குடியிருந்து வந்தவர் 33 வயதான இந்திய வம்சாவளி பெண்மணி ஷாலினா பத்மநாபா.
திருமணம் முடிந்து பல ஆண்டுகள் பிள்ளை இல்லாத காரணத்தால், செயற்கை முறையில் கருத்தரிக்க முடிவு செய்து, அதில் ஷகுன் என்ற பிள்ளையை பெற்றெடுத்தார்.
ஆனால் உரிய காலத்திற்கு முன்னரே பிறந்ததால் குழந்தை ஷகுன், நான்கரை மாதம் மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சையில் இருந்துள்ளது.
ஆனால் குடியிருப்புக்கு திரும்பிய பின்னரும் அந்த குழந்தைக்கு சிறப்பு கவனம் தேவைப்பட்டுள்ளது. இது ஒருகட்டத்தில் அதன் தாயார் ஷாலினாவுக்கு தொல்லையாக மாறவே, அந்த பிஞ்சு குழந்தையை வாய்ப்பு அமையும்போதெல்லாம் துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2017, ஆகஸ்டு மாதம், குழந்தையை ஷாலினா கொடூரமாக தாக்கியதில் அதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயத்தில் இருந்து மீளாத குழந்தை ஷகுன், சில மணி நேரத்திலேயே மரணமடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஷாலினா, விசாரணை முடிவில் 6 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் காலம் முழுக்க தமக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளதாக கூறும் குழந்தையின் தந்தை,
அவள் வளர்ந்து உயரங்களை தொட வேண்டும் என்ற எனது கனவுகள் அனைத்தும் வீணாகியுள்ளது என கதறியுள்ளார்.
ஆனால், தமது மகளை தாம் கொலை செய்யவில்லை எனவும், அது அவரது விதி என்பதாலையே மரணமடைந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார் ஷாலினா பத்மநாபா.