குழந்தையை பெண்ணொருவர் கொடூரமாக அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்றை ரஜினிகாந்த் மனைவி வெளியிட்டு வீடியோவில் உள்ள பெண் குறித்த தகவலை தெரிவிக்க கோரியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மனைவி லதா Peace For Children என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவன அமைப்பை நடத்தி வருகிறார்.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் அவ்வபோது குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் டுவிட்டரில் லதா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரு குழந்தையை பெண்ணொருவர் கொடூரமாக அடித்து கீழே தூக்கி போடுகிறார்.
அந்த வீடியோவுடன் ஒரு பதிவையும் லதா வெளியிட்டார். எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க உதவுங்கள், அந்த பெண்ணை சட்டத்துக்கு முன்னர் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
இது தொடர்பாக தகவல் தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கலாம் என கூறி ஒரு போன் நம்பரை கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த இணைய பயன்பாட்டாளர்கள் பதறி போனார்கள், இப்படிப்பட்ட கொடூர உள்ளம் கொண்ட பெண்ணா என கூறியதோடு அந்த பெண்ணை கண்டுப்பிடிக்க உதவும் நோக்கில் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
Peace for Children:let’s come together and make a difference.Kindly request everyone to help track this atrocity been committed to a helpless child.Justice must be served and the guilty punished if anyone has any information please share with us at our toll free number18001208866 pic.twitter.com/QFtMsOAbcu
— Latha Rajinikanth (@OfficialLathaRK) July 19, 2019