அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்க போர்க்கப்பல்களின் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளது ஈரான்.
23 பேருடன் பிரித்தானியா எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்ததை தொடர்ந்து துணிச்சலாக வீடியோவை வெளியிட்டுள்ளது ஈரான்.
அமெரிக்காவின் பாக்ஸர் மற்றும் போர்க்கப்பல்கள் குறிவைக்கும் வகையில் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ள ஈரான், அமெரிக்க எந்தவித தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வெளிகாட்டியுள்ளது.
குறித்த வீடியோ ஈரான் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் தனது ட்ரோனை வீழ்த்தியதாக கூறியதை மறுத்த ஈரான், அமெரிக்கா தனது சொந்த ட்ரோனை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது என்று வினோதமாகக் கூறியுள்ளது.
Second footage of USS Boxer captured by IRGC surveillance drone Trump said the warship has downed pic.twitter.com/j63TDzTxnH
— Reza Khaasteh (@Khaaasteh) July 19, 2019
அனைத்து ட்ரோன்களும் தங்கள் தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பிவிட்டதாக கூறிய ஈரானிய இராணுவ, முந்தைய நாள் ஒரு அமெரிக்க கப்பலுடன் எந்த மோதலும் இல்லை என்றும் மறுத்துள்ளது.