6 மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம்…….

6 மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் உ.பி. கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உ.பி. மாநில முதல்வர் ராம்நாயக் கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குவங்க மாநிலம், பிகார், நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலாங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,

1. மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உத்தரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

2. பிகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. மேற்குவங்க ஆளுநராக இருந்த கேசரி நாத் திரிபாதிக்கு பதிலாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜகதீப் தாங்கர் நியமனம்

4. திரிபுரா ஆளுநராக நியமனம் பாஜகவைச் சேர்ந்த ரமேஷ் பயஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

5. பஹூ சவுகான் பீகார் மாநில ஆளுநராக நியமனம்

6. நாகலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.