இந்து சமுத்திரத்தில் பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் ரீயூனியன் தீவிற்கு இலங்கையில் இருந்து அகதிகள் படகொன்று சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த படகு தொடர்பில் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான படகுகள் வருமாக இருந்தால் அதனை திருப்பி அனுப்புவதற்காக ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த படகு இலங்கையில் இருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்தே ரீயூனியன் அதிகாரிகள் இந்த தயார் நிலையை அறிவித்துள்ளனர்.
என்றாலும், இதுவரை இந்த படகு தமது தீவுக்கு வருவது தொடர்பாக எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.