சென்னையில் பல இடங்களில் திருடி இரண்டு மனைவிகளுடன் சொகுசாக வாழ்ந்து வந்த பலே திருடன் ஒருவழியாக பொலிசில் சிக்கியுள்ளான்.
கே.கே நகரில் கடந்த ஜனவரியில் ஒரு வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொலிசார் சிசிடிவி-யை ஆய்வு செய்தபோது கொள்ளையடித்தது பிரபல திருடன் ஆரிப்பிளிப்ஸ் மைக்கேல் எனத் தெரியவந்தது.
இதனிடையில் கடந்த 3ஆம் திகதி மயிலாப்பூரில் உள்ள வீட்டில் ரூ 1.80 லட்சம் பணமும், நகைகளும் கொள்ளை போனது.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அப்போது கைரேகை மூலம் திருடியது மைக்கேல் தான் என தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் அவனை கைது செய்தனர், மைக்கேல் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், பள்ளியில் படிக்கும்போதே ஹாக்கி விளையாட்டு பிடிக்கும். பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன்
வருங்காலத்தில் ஹாக்கி வீரராக ஆக வேண்டும் என நினைத்தேன், ஆனால் வேலை கிடைக்காமல் திருடனாக மாறினேன்.
எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு திருமணம் செய்த எனக்கு குடும்பம் நடத்த போதுமான வருமானம் கிடைக்கவில்லை.
இதனால் தான் சின்னச் சின்னதாக திருட ஆரம்பித்த நான் அதில் கிடைத்த பணத்தால் திருடுவதையே தொழிலாக மாற்றிக்கொண்டேன்.
திருட்டால் லட்ச லட்சமாக சம்பாதித்தேன். வாழ்க்கையும் சந்தோஷமாக சென்றுகொண்டிருந்தது. ஒரு மனைவியை திருப்பத்தூரிலும், இன்னொரு மனைவியை சென்னையிலும் வைத்து குடித்தனம் நடத்திவந்தேன் என கூறியுள்ளார்.