இந்த உலகில் பலர் பலவிதமான காரணத்தால் இறந்து வருகின்றனர். தங்களின் வாழ்க்கையில் சிறிய விசயத்திற்கு கூட தற்கொலை செய்த சிலரும் உள்ளனர். அவர்களை பொறுத்த வரையில் ஒரு பதவியோ?.. ஒரு போட்டியோ?.. அதில் வெற்றியடையவும் அதிகாரத்தை நிலைநாட்டவும் ஆசைப்பட்டு., அவ்வாறு அந்த ஆசை தீரவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்ததாக நினைத்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.
நாம் பிறந்ததே நல்ல அருமையான வாழ்க்கையை வாழத்தான்… அதனை நல்ல வழியில் வாழ்ந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். சிறுவயதிலேயே பல குழந்தைகள் தற்கொலை செய்யும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில்., வகுப்பறையின் தலைமை பதவி கிடைக்காததால் சிறுவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமணப்பேட்டை பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வந்த 13 வயதாகும் சிறுவன் தனது வகுப்பிற்க்கான தலைமை பொறுப்பிற்க்காக போட்டியிட்டுள்ளான். இந்த போட்டியில் மாணவர் தோல்வி அடைந்ததால்., மனமுடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதியன்று திடீரென மயமாகியுள்ளார்.
இந்த நிலையில்., சிறுவனை காணாது தேடி அலைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். இந்த சமயத்தில்., அங்குள்ள இரயில்வே பாதை அருகே மாணவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில் மாணவனின் தற்கொலை முடிவிற்கான காரணம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.