நடிகை ஆலியா பட்டின் தோழியை காதலிக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகைகளும் நெருங்கி பழகுவது வழக்கம் . அவர்கள் மத்தியிலும் காதல் மலர்ந்துள்ளதாக பல நேரங்களில் பல செய்திகள் வெளியாகும்.

அதில் சில செய்திகள் உண்மையாக இருக்கும். இந்திய கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலும் பல நடிகைகளுடன் காதலில் விழுந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் நெருங்கிய தோழி அகன்ஷா ரஞ்சனையும், கேஎல் ராகுலும் காதலிப்பதாகவும் அவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.