இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது!

கனடாவின் டொராண்டோ நகரில் குற்றுயிராக மீட்கப்பட்ட பெண் மரணமடைந்த விவகாரத்தில் அவரது காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டொராண்டோ நகரில் பார்ட்லெட் அவென்யூ மற்றும் ப்ளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் இருந்து வியாழனன்று பொலிசார் மற்றும் அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ பகுதிக்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினர் மற்றும் பொலிசார் குடியிருப்பு ஒன்றில் இருந்து 36 வயது மதிக்கத்தக்க கேத்ரின் நைடோபா என்பவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

குற்றுயிராக மீட்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, சில மணி நேரங்களிலேயே மரணமடைந்ததாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு, மரணமடைந்த பெண்ணை தாக்கியது 43 வயதான அவரது காதலன் மத்தேயு லார்மன் என தெரியவந்தது.

தனிப்பட்ட பிரச்னை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என உறுதி செய்த பொலிசார், மாயமான அந்த நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளியன்று இரவு லார்மனை கைது செய்துள்ளதாகவும் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.