வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த 15 நாளில் இளம் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா (37). இவர் மனைவி சாந்தி (29). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார்.
இதையடுத்து சாந்தி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாந்தி ஓசூர் அருகே உள்ள அழகு நிலையத்தில் வேலை வேலைக்கு சேர்ந்து அங்கேயே வீடு எடுத்து தங்கினார்.
இதையடுத்து சாந்தியின் குழந்தைகள் சொந்த ஊரில் தாத்தா-பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தனர்.
இதனிடையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இளையராஜா ஊருக்கு வந்தார்.
ஊருக்கு வந்ததில் இருந்தே இளையராஜாவுக்கும், சாந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல சாந்தி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து பொலிஸ் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது சாந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
அவரது தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரது கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து, பின்னர் கழுத்தில் கயிறால் சுருக்கு மாட்டி வீட்டு ஜன்னலில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பொலிசார் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சாந்தியை அவரது கணவர் இளையராஜா கொலை செய்துவிட்டு தற்கொலை போல சித்தரித்து நாடகம் ஆடமுயன்றதும், அது நிறைவேறாததால் உடலை போட்டு விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக உள்ல இளையராஜாவை பொலிசார் தேடி வருகிறார்கள்.