மனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்!

குஜராத் மாநிலம் கோடாசர் பகுதியில் சார்ந்த ரேஷ்மா குலவாணி (வயது 40). இவர் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது கணவர் கைலாஷ் குமார் சமீபகாலமாக வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன்பு ரேஷ்மா குலவாணி பர்ஸிலிருந்த3 ஆயிரம் ரூபாய் காணவில்லை. இதுகுறித்து கைலாஷ் குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணத்தை திருடினாயா? என்று கேட்டதால் ஆத்திரம் அடைந்த கைலாஷ் குமார் மனைவியின் தலையை பிடித்து இழுத்து போட்டு அடித்துள்ளார்.

ரேஷ்மா குலவாணியின் மூக்கை பயங்கரமாக கடித்துள்ளார். ரேஷ்மா குலவாணி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் விலக்கி விட்டனர். மேலும் ரத்த காயத்துடன் இருந்த ரேஷ்மா குலவாணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது ரேஷ்மா குலவாணிக்கு மூக்கில் 15 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக ரேஷ்மா குலவாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கைலாஷ் குக்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.