பிக்குகள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கரை சந்தித்து காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
பிக்குகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதற்காக அஸ்கிரிய பீடத்தால் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அவர் இன்று மாலை அஸ்கிரிய விகாரைக்கு வந்து அந்த பீடத்தின் மாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் உள்ளிட்ட அஸ்கிரிய பீடத்துடன் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.