துபாயில் வசித்து வந்த இந்திய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மஞ்சுநாத் நாயுடு 30 வயதான இவர், துபாயில் பிரபல ஸ்டாண்ட அப் காமெடியனாக திகழ்ந்து வருகிறார். இவருக்கென துபாயில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது, இவரது ரசிகர்கள் இவரை மேங்கோ என செல்லமாக அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் காமெடி கலைஞர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது, அதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுநாத், மறைந்த தனது பெற்றோரின் கதைகளை கூறி மேடையில் பெர்பார்மன்ஸ் செய்து அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.
இதனைதொடர்ந்து, கவலையால் ஏற்படும் மன அழுத்தை பற்றி பாவனையுடன் நகைச்சுவையாக பேசி நடித்து கொண்டிருந்த அவர் திடீரென மேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி சரிந்தார். இதனை பார்த்த பார்வையாளர்கள் மஞ்சுநாத்தின் நகைச்சுவையின் ஒரு பகுதி என நினைத்தார்கள். ஆனால் வெகு நேரமாகியும் மயங்கி விழுந்த மஞ்சுநாத்தை எழுப்பியபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.