வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சின்னமூக்கனுர் பகுதியை சார்ந்தவர் சக்தி. இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகேயிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில்., கடலூர் பிஞ்சானுர் பகுதியை சார்ந்த முருகானந்தம் என்பவரின் மகளான திவ்யா என்பவரும் பணியாற்றி வந்தனர். இந்த சமயத்தில்., சக்திக்கும் – திவ்யாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பானது காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலின் வளர்ச்சிக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., காதல் மனைவியை சக்தி சின்னமூக்கனுருக்கு அழைத்து சென்ற நிலையில்., இருவரும் வேறு வேறு ஜாதியை சார்ந்தவர்கள் என்பதால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து., ஊர் மக்களின் முன்னிலையில் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர்.
இந்த சமயத்தில்., திவ்யாவின் தந்தை., ஆறது மனைவியுடன் பெங்களூருக்கு வந்த நிலையில்., பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திவ்யாவின் பெங்களூர் பணியானது சக்திக்கு தெரியவரவே., நேரில் சென்று சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., திவ்யாவை காணவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் சக்தி – திவ்யாவை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும்., திவ்யா – கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணி திவ்யாவின் பெற்றோர் கூறிய நிலையில்., இருதரப்பினருக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவானது எட்டப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில்., சம்பவத்தன்று திவ்யா விஷம் குடித்ததாகவும்., அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும்., பின்னர் கடந்த 17 ஆம் தேதியன்று மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும்., மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே திவ்யா பரிதாபமாக உயிரிழந்ததாகவும்., தெரியவந்துள்ளது. மேலும்., சக்தியின் குடும்பத்தினர் திவ்யா விஷம் குடித்து தற்கொலை முடிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., திவ்யாவின் குடும்பத்தினர் அவரின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சக்தியின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து., குடும்பத்துடன் தலைமறைவான அனைவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.