பிரேசில் நாட்டில் மேடையில் நின்று கொண்டிருந்த பாதிரியாரை பெண் ஒருவர் திடீரென தள்ளிவிடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரேசிலின் சாவோ பாலோவின் கச்சோயிரா பாலிஸ்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மார்செலோ ரோஸ்ஸி என்கிற அந்த பாதிரியார், நேரலையில் பொதுமக்கள் முன் உரையாற்றி கொண்டிருந்தார்.
அப்போது அவர் “கொழுத்த பெண்கள் சொர்க்கத்திற்கு செல்லமாட்டார்கள்” எனக்கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அங்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பையும் மீறி மேடைக்கு வந்துள்ளார்.
She shoved him because he said fat women won’t go to heaven ?????????????pic.twitter.com/lkL4qwplic
— ?? (@zemunna) July 18, 2019
பின்னர் வேகமாக பாதிரியாரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பாதிரியார்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பாதிரியாருக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லை என்றும், அடுத்த சில நிமிடங்களில் அவர் மீண்டும் தன் உரையை துவங்கினார் எனவும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.