5 மாவட்டங்களில் நாடக காதல் விவகாரத்தில் 269 பேர் மாயம்..!

அரசு கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வருக்கான கருத்தரங்கு திருச்சி., புதுக்கோட்டை., கரூர்., பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை மையமாக கொண்டு சமயபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு திருச்சி மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

திருச்சி மாவட்ட காவல் ஆணையர் பேசியதாவது., திருச்சி மாவட்ட சரகத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டத்தில்., கடந்த மூன்று வருடத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் சமயத்தில்., காதல் வயப்பட்டு வீட்டினை விட்டு வெளியேறி சென்றதாக சுமார் 40 சிறுவர்கள் மாயமாகியுள்ள வழக்கும்., சுமார் 154 சிறுமிகள் மாயமாகியுள்ள வழக்கும்., சுமார் 119 இளம்பெண்கள் மாயமாகியுள்ள வழக்கும்., 8 வாலிபர்கள் மாயமாகியுள்ள வழக்கும் இது வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காதல் வயப்படுத்தலில் சிக்கி வீட்டை விட்டு வெளியேறியதில் பெரும்பாலனோர் 18 வயதை விட குறைவனர்களாக உள்ளனர். கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு போக்ஸோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம்., குழந்தை திருமணத்தை தடுத்தல்., ராகிங் தடுத்தல்., பணியிட பாலியல் வன்கொடுமை போன்றவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

கல்லூரியில் இருக்கும் மாணவர்களின் தற்கொலையை தடுக்கவும்., இளவயதுள்ள பெண்கள் காதல் வலையில் விழுந்து., வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்கவும்., பள்ளி – கல்லூரியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆலோசனை செய்ய வேண்டும் என்றும்., புகையிலை மற்றும் போதை பொருட்களின் விற்பனை குறித்து அறிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இருபாலர் பயின்று வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தனித்தனி குழுக்கள் அமைத்து., மேற்கொண்ட பிரச்சனையை தீர்வு காண வேண்டும். இதற்கான உதவியாக காவல் துறையினரும் தங்களின் கடமையை செய்வார்கள் என்று தெரிவித்தார்.