சூர்யாவின் பேச்சுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்.!!

புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கருத்து கூறியுள்ளார். ரஜினிகாந்த் இதுபற்றி கூறியதாவது.

சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை தாம் வரவேற்பதாக கூறியிருந்தார்.

சூர்யா பேசியது அவர் மனதில் இருந்த நெருப்பு என்று குறிப்பிட்ட ரஜினி மாணவர்கள் படும் கஷ்டங்களை அனைவரிடமும் எடுத்துரைத்தவர் என்றும் பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி பேசியிருந்தால் பிரதமர் மோடிக்கு எட்டியிருக்கும் என்று விழாவில் பேசிய கபிலன் வைரமுத்துக்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி பேசிய போது சூர்யா பேசியதே மோடி அவர்களுக்கு கெட்டுவிட்டது என்று கூறினார்.