இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் இரண்டு அல்லது மூன்று மனைவிகளுடன் வாழ்வது அங்கு சாதாரண விடயமாக பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது லகிம்பூர் கீரி படீப்பூர் கிராமம்.
இந்த கிராமத்தில் 3000 பேர் வசித்து வருகிறார்கள். இவ்வளவு குறைவான மக்கள் வசித்தாலும் இந்த கிராமம் மற்ற கிராமங்களை காட்டிலும் பல வகையில் ஆச்சரியத்தை கொடுக்கிறது.
காரணம், இங்கு வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியில் இருக்கிறார்கள்.
இதோடு கிராமத்தில் வசிக்கும் ஆண்களில் பலர் இரண்டு அல்லது மூன்று மனைவிகளுடன் தான் வாழ்கிறார்கள்.
அந்த ஆண்களுக்கு கிராமத்தில் ஒரு வீடும், பணி செய்யும் இடத்தில் ஒரு வீடும் உள்ளது. இரண்டு வீடுகளிலும் தங்கள் மனைவிகளை தங்கவைத்து கொள்கிறார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்வதற்கு ஆண்கள் காரணம் ஒன்றை கூறுகிறார்கள்.
அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்ணை மணந்தால் ஊரில் தங்களுக்கு அதிக மரியாதையும், கெளரவமும் கிடைக்கும் என்பதாலேயே இதை செய்வதாக கூறுகிறார்கள்.