ஜப்பானில் காதலியைப் பார்ப்பதற்காக 2,400 கி.மீற்றர் பயணம் செய்து சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவத்தை அவர் வேதனையுடன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஜப்பானில் இருக்கும் தன் காதலிக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காக சுமார் 2,400 கி.மீற்றர் பயணம் செய்து கரடி உடையணிந்து சென்றுள்ளார்.
அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,எனது காதலிக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக சீனாவிலிருந்து 2,400 கி.மீற்றர் தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றேன்.
காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து முகத்தை மூடியபடியே சென்றேன். ஆனால், இது முழுக்க ஒரு முட்டாள்தனமான முயற்சி என்பது பின்னரே தெரிந்தது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பதிவில், அவர் தன்னுடைய காதலியை அவருடைய காதலியை மூகமூடியைக் கழற்றாமல் வேறொரு நபருடன் பார்க்கிறார். அதன் பின் புகைப்படத்தில் தன் முகத்தில் இருந்த கரடி பொம்மை முகமூடியை நீக்கிவிட்டு அந்த பெண்ணை பார்கிறார், அந்த பெண்ணும் அவரை எதிர்நோக்குகிறார்.
அருகிலிருக்கும் கடைக்காரர் ஒருவர், சோகத்துடன் முகத்தை மூடும் காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது புகைப்படத்தில், மீண்டும் முகமூடியை அணிந்துக்கொண்டு, வந்த பாதையிலே திரும்பி செல்கிறார்.
காதலனைப்பார்த்த அந்த பெண் அவரை நோக்கி ஓடுகிறார்இருவரும் ஆரத் தழுவுவது போன்ற புகைப்படம் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமின்றி, அந்த டுவிட்டை 19, 500 பேர் ரீடுவிட்டும், 80, 400-க்கும் அதிகமானோர் லைக்கும் செய்துள்ளனர்.