நண்பன் பேசாததால், தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!

புதுச்சேரியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முன்பு கடலூரைச் சேர்ந்த சந்துரு என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு பேஸ்புக் மூலம் இருவரும் நண்பர்கள் ஆயினர். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.

ஆனால், சில நாட்களாக வினோத்திடம் சந்துரு பேசுவதை தவிர்த்துள்ளார். பலமுறை வினோத் தொடர்பு கொண்டும் சந்துரு தவிர்த்துள்ளார். இதன் காரணமாக விரக்தி அடைந்த வினோத் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை கண்டு கொண்ட வினோத்தின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த வினோத்தை சந்துரு பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால், பார்த்துவிட்டு வினோத்திடம் பேசாமலே சந்துரு சென்றுவிடவே, மேலும், சோகம் அடைந்த வினோத் மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். “எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என கத்தியுள்ளார்.

இதன் காரணமாக நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்ளிட்டோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தினால் மருத்துவமனை முழுவதும் பரபரப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக உடனடியாக காவல் துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வினோத்திடம் சமாதானம் பேசி இறங்குமாறு கூறினார்கள்.

ஆனால் அவர் ஏற்க மறுத்து நண்பன் என்னிடம் செல்போனில் பேசினால் தான் நான் கீழே இறங்குவேன் என்று அடம்பிடித்துள்ளார். இதன் காரணமாக சந்துருவின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரை மருத்துவமனைக்கு வரவழைத்தனர். பின்பு சந்துருவை கீழே இறங்குமாறு கூறினர்.

அப்போது அவர் என்னிடம் செல்போனில் பேசுவார் என்று சத்தியம் செய்தால்தான் கீழே இறங்குவேன் என அடம்பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து சந்துரு சத்தியம் செய்து கொடுத்தார். அதன் பின்னர் அங்கிருந்து அவர் கீழே இறங்கி வந்துள்ளார். காவல்துறையினர் அவரை மீண்டும் அறிவுரை கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சந்துருவிடம் விசாரித்த போது சில நாட்களுக்கு முன்பு காவல் துறை ஆளெடுப்பு வேலைக்காக சென்னை சென்றிருந்தேன். அதனால்தான் வினோத்திடம் பேச முடியவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.