நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழப்பு சுங்கச் சாவடி ஊழியர்.!!!

புதுச்சேரியில் குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வயது 27 இவர் கிழக்கு கடற்கரைச் சாலை மொரட்டாண்டியில் உள்ள சுங்கச் சாவடியில் ஊழியராக பணிபுரிந்துவந்தார்.

நேற்று முன் தினம் இரவு பணியில் இருந்தபோது ஒரு உணவகத்திலிருந்து நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார் பாதி அளவு சாப்பிட்டு விட்டு மீதியை வைத்திருந்தார். நேற்று காலை அவர் மீதமிருந்த நூடுல்சை சாப்பிட்டுள்ளார் சிறிது நேரத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இதனால் துடிதுடித்துப்போன மணிகண்டனை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து போனார்.

நூடுல்ஸ் கெட்டுப்போய் ஃபுட் பாய்சன் ஆகி உள்ளது அறியாமல் மணிகண்டன் சாப்பிட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஆரோவில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த நூடுல்சை இந்த ஓட்டலில் வாங்கப்பட்டது என விசாரணை நடந்து வருகிறது.