இலங்கை தலைநகர் கொழும்பூரில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையின் போது 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை, கொழும்பு மாநிலத்தில் ராஜகிரிய கோட்டை சாலையில் நடத்தி வரப்பட்ட விபச்சார விடுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி வரப்பட்ட விபச்சார விடுதியை சுற்றி வளைத்து வெலிக்கடை காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த விபச்சார விடுதியில் இருந்த 3 பெண்கள் காவல் துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் விவகாரத்தில் தொடர்புடைய பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.