இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதல் இரண்டு போட்டிகளும் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற உள்ளது. போட்டி ஆகஸ்ட் 3 மற்றும் 4ம் தேதிகளில் இந்த இரண்டு டி20 போட்டிகளும் அடுத்தடுத்து நடைபெறுகிறது. மீதமுள்ள கடைசி மற்றும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் தேர்வாகியுள்ள க்ருணால் பாண்டியா, கோலியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவரிடம் இருக்கும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனை கற்க விரும்புகிறேன். அதைப்போல தோனியிடம் இருந்து சூழ்நிலைகளை புரிந்துகொண்டு ஆடுவதை கற்க விரும்புகிறேன் என்று கூறினார்.