வேளாங்கண்ணி அருகே உள்ள திருக்குவளை அருகேஇருக்கும், எட்டுக்குடி வல்லம் பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது54) என்பவர், எட்டுக்குடி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், காமராஜ் ஈசனூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது, திருத்துறைப்பூண்டியை நோக்கி நாகையில் இருந்து சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதன்காரணமாக படுகாயம் அடைந்திருந்த காமராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.